Breaking News

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது

- ஐ.ஏ. காதிர் கான் -

கட்டார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நபரொருவரை ஏமாற்றி, பண மோசடி செய்த நபரொருவர்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளினால் கைது செய்துள்ளார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குக்  கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், எப்பாவல - எல திவுல்வெவ பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்தே, அவர் இவ்வாறு பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர், முறைப்பாடு செய்த நபர்களிடம் சுமார் 16 இலட்சம் ரூபாவை இவ்வாறு மோசடி செய்துள்ளதாகவும், இதில் ஓய்வு பெற்ற இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர்கள் அடங்குவதாகவும்,  விசாரணைகளிலிருந்து  தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர், ஒரு இடைத்தரகர் என்பது குறிப்பிடத்தக்கது.


(ஐ.ஏ. காதிர் கான்)

(கம்பஹா மாவட்ட செய்தியாளர்) 

11/09/2023.




No comments

note