Breaking News

110 ஆண்டுகளில் முதன் முறையாக கரைத்தீவு முஸ்லிம் தேசிய பாடசாலையின் பழையமாணவர்களின் ஒன்றுகூடல்

110 வது அகவையில் காலடி எடுத்து வைக்கப்போகும் கரைத்தீவு முஸ்லிம் தேசிய பாடசாலயின் அபிவிருத்திக்கென ஒன்றாய் அணிதிரண்ட  30 வருட கால பழைய மாணவர்கள் 



புத்தளம் மாவட்ட வடக்கு கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட கரைத்தீவு முஸ்லிம் தேசிய பாடசாலை 1913ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகும்.  சேர் ஜோசப் அல்ப்றட் என்பவரே இந்த பாடசாலையின் ஆரம்பகர்தாவாக திகழ்ந்திருக்கின்றார். 


இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள் என ஊரின் பெரும்பாலானோர் கலந்துக்கொண்டமை சிறப்பம்சமாகும் .

இதனடிப்படையில் சமகால பொருளாதார நெருக்கடிகளினால் பாடசாலையின்  கல்வி மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தடைப்பட்டுவிடக்கூடாது என சிந்தித்து பழைய மானவர்கள் பலர் ஒன்றிணைத்து கடந்த 24 ஏப்ரல் 2023 அன்று 30 அணிகளைக்கொண்ட   மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றது இதில் ஜூனியர் அணியின் சம்பியனாக 2015ம் ஆண்டு சாதாரண தர அனியும் சீனியர் சம்பியன் அனியாக 2001ம் ஆண்டு சாதாரண தர அணியும் வெற்றிபொற்றது.

அதனைத்தொடர்ந்து 25 ஏப்ரல் 2023 அன்று மாபெரும் கலை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 30 வகுப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 3000க்கும் பேற்பட்ட பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் பள்ளி நண்பர்களோடு அளவளாவ சந்தர்ப்பமும் கிட்டியது, கரைத்தீவின்  பாரம்பரிய நிகழ்வான கலிகம்பு உற்பட ஏனைய கலை நிகழ்சிகளும் அரங்கேறியது.


மேலும் கரைத்தீவு முஸ்லிம் தேசிய பாடலையில் ஆம்பகாலங்களில் பணியாற்றிய, பாடசாலையின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட முன்னால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கெளரவிக்கப்பட்டதோடு இராப்போசனமும் வழங்கப்பட்டது.


இதன்போது கலந்து கொண்ட அனைத்து பழைய மாணவர்களும் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவோம் என்றும் உறுதி பூண்டனர்.




No comments

note