முன்னாள் அமைசர் ஏ.எச்.எம். பௌசி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி இன்றைய தினம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி பௌசி இன்றைய தினம் நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் முதல் நடவடிக்கையாக இந்த பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
No comments