Breaking News

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் இருந்து 44 மாணவர்கள் புலமைக்குத் தகுதி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இம்முறை (2022) இடம்பெற்ற  புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/ கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் இருந்து 44 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக அதிபர் யூ.எல். நஸார் தெரிவித்தார்.


இப்பாடசாலையில் இருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குக் தோற்றிய 244 மாணவர்களில் 232 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது 95.6 சதவீதமாகும்.


இதனைப் பாராட்டு முகமாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளரும் பாடசாலை எஸ்டிஈசீ இன் செயலாளருமான ஏ.எம். சாஹிர், சாய்ந்தமருது கோட்டத்தை வலயத்தில் மூன்றாம் இடத்துக்கு உயர்த்துவதற்கு கைகோர்த்து உழைத்த கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.மலீக், முன்னாள் அதிபர் மஜீத் ஆகியோரின் பங்குபற்றலுடன் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் பாராட்டப்பட்டனர். இதன்போது வலயக்கல்விப் பணிப்பாளர் சௌதுல் நஜீமுக்கு அதிபர் நன்றி தெரிவித்தார்.


இதேவேளை, இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் மற்றும் பிரதி அதிபர் நுஸ்ரத் பேகம், உதவி அதிபர் ஐனூல் மர்சுனா, பகுதித்தலைவர்களான கே. எல். ஜஃபர், சியானா நௌசாத், புலமைப்பரிசில் கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் ஆகியோருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.





No comments

note