கல்முனை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு
நூருள் ஹுதா உமர்
உலக சிறுவர் தினத்தையொட்டி அம்பாறை கல்வி வலய அம்/ கல்முனை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு இன்று (04) பாடசாலை அதிபர் லக்ஸ்மன் ஹேமகுமாரவின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக ரஹ்மத் பௌண்டசன் பிரதானியும், கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கல்வி மேம்பாடுகள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வில் பாடசாலை முகாமைத்துவ சபையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments