இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு
நூருள் ஹுதா உமர்
உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கல்வி வலய கமு/ இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும், விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று (04) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் இடம் பெற்றன.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தருமான எம். இராமக்குட்டி , கல்முனைப் பொலிஸ் நிலையப் பிரதானபொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட், மற்றும் விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்நடத்த்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சாஜித் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு, துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்வலமும், மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது.
No comments