சிறப்பாக இடம்பெற்ற மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழா - 2022
மதுரங்குளி மீடியாவினால் ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (09) மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் ட்ரீம் செண்டரில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.ஏ.எல்.பீ. ஹப்பு ஆராய்ச்சி அவர்களும், விஷேட அதிதியாக புத்தளம் - தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர அவர்களும், கௌரவ அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷேய்க் எச்.எச். நஜீம் (ஷர்கி), சேனைக்குடியிருப்பு ஜும்ஆப் பள்ளி தலைவர் ஏ.ம். இஸ்மத், உலமாக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது போட்டியில் பங்கு பற்றி சரியான விடையளித்த போட்டியாளர்களில் குளுக்கள் முறையில் அதிஷ்சாலிகள் தெரிவு செய்யப்பட்டு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டதொடு, போட்டியாளர்களில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 55 போட்டியாளர்களுக்கு 1000/= ரூபா வீதம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
முதலாம் பரிசான ஒரு இலட்சம் (100,000/=) ரூபாவினை கல்பிட்டி பூலாச்சேனையைச் சேர்ந்த அப்தா (நஸ்ரின் அப்துல் லத்தீப்) அவர்களும், இரண்டாம் பரிசான 25,000/= ரூபாவினை நல்லாந்தழுவையைச் சேர்ந்த எம்.எஸ்.எப். ஸப்கா அவர்களும், மூன்றாம் பரிசான 10,000/= ரூபாவினை விருதோடையைச் சேர்ந்த பாத்திமா சிபானா அவர்களும், நான்காம் பரிசான 5,000/= ரூபாவினை மாதம்பையைச் சேர்ந்த றஸானியா நஸீம் அவர்களும் ஐந்தாம் பரிசான 1000/= ரூபா வீதம் 5 அதிஷ்டசாலிகள்
1. எம்.என்.செய்த் ஹாஸிமி - நல்லாந்தழுவை
2. சிப்னாஸ் நிஜாம் - கனமூலை ரஹ்மத் கிராமம்.
3. பாத்திமா சிஹானா - நல்லாந்தழுவை
4. எம்.எஸ்.சிபா - கனமூலை
5. எம்.ஐ. அயாஸ் அஹமட் - புழுதிவயல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி நிகழ்சியின் பரிசளிப்பு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அதற்கான பரிசளிப்பு இவ்விழாவின் போது ஏற்கனவே குளுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 55 அதிஷ்டசாலிகளுக்கு 1000/= ரூபா வீதம் பணப் பரிசு வழங்கியதோடு இன்னும் 18 அதிஷ்டசாலிகளுக்கு பணப்பரிசு வங்கியில் வைப்பிலிடப்படும்.
இதன் போது இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியை வடிவமைத்து, வினாக்களை தொகுத்து வழங்கி மேற்பார்வை செய்த கடையாமோட்டை தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் அஷ்ஷேய்க் எம்.எச் ஹனஸ் மொஹிதீன் (நளீமி) அவர்களுக்கு மதுரங்குளி மீடியா சார்பில் கடையாமோட்டை தேசிய பாடசாலையின் ஆசிரியரும், விழா ஏற்பாட்டாளருமான ஏ.எச். பௌசுல் ஆசிரியரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments