அல்சவாஹிரி ஸ்னைப்பர் தாக்குதலில் பலி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தகவல்
அல்கைதா அமைப்பின் தலைவர் அய்மான் அல்சவாஹிரி அமெரிக்க இராணுவத்தின் ஸ்னைபபர் தாக்குதலில் பலியாகி உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
காபுல் நகரில் பாதுகாப்பான இடம் ஒன்றில் வசித்து வந்த நிலையில் இவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவிக்கிறது . செப்டம்பர் 11 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என அமெரிக்காவால் இனங்காப்பட்டுள்ள சவாஹிரி ஒசாமா பில் லேடனின் மறைவுக்குப் பின் அல் கைதா அமைப்புக்கு தலைமை தாங்கியவராவார்.
எனினும் இதற்கு முதலும் பல தடவைகள் இவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பில் அல்கைதா இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.
No comments