வாழ்வாதாரத்தை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !!
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு கரம் கொடுக்கும் நோக்குடன் நிந்தவூர் கமு/ கமு/ அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில் இங்கு ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் தேவை உடைய திறமை காட்டிய மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளரும், இலங்கை சுங்க திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருமான ஓ.எல்.சப்ரி இஸ்மத், வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஏ இந்திகாப் அலி, பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித் பாடசாலை அதிபர் எம் எச் அப்துல் பதியு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments