ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த இராஜினாமா குறித்துப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தல் வழங்கினார்.
வெற்றிடமாகும் இப்பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments