மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பலத்த கண்டனம்
யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க முடியாததொரு வங்குரோத்துச் சர்வாதிகாரம், அலரி மாளிகையையும் காலி முகத்திடலையும் சூழ அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது அப்பட்டமான வன்செயலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கோத்தாவும், மஹிந்தையும் கேவலப்பட்டு வெளியேறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
பொது ஜன முன்னணியரின் இந்த எல்லை மீறிய செயல் அவர்களின் கடைசிக் கோரத் தாண்டவமாகும்.
அவர்கள் தவறாக ஒரு தலைமுறையினருடன் குழம்பிக் கொண்டார்கள். இந்தத் தோற்று போன குண்டர் கும்பலின் அட்டகாச அடந்தேற்றம் பரவலான கண்டனத்துக்குள்ளாகும். அவர்களுக்கு கை கொடுக்க யாருமே முன்வர மாட்டார்கள்.
மேற்கண்டவாறு,திங்கள் கிழமை(9) தாக்குதல் சம்பவம் நடை பெற்று கொண்டிருக்கும் போது பலத்த கண்டனத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
No comments