Breaking News

மதுரங்குளி - கனமூலையில் "தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையம்" திறந்து வைப்பு!

மதுரங்குளி - கனமூலையில் கனமூலை தாருஸ்ஸலாம்  ஜனாஸா நலன் புரிச்சங்கம் மற்றும் கனமூலை பெரிய பள்ளி ஏற்பாட்டில் "தாருஸ்ஸலாம் மருத்துவ நிலையம்" (Dharussalam Medical Center) 06 ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச்சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்ஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வன்னிநாயக்க ஜயபத்மா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.


இவ்விழாவிற்கு கௌரவ அதிதிகளாக முந்தல் பிரதேச  செயலாளர் திருமதி விஜானி வஸன்திகா, புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பீ.எஸ். ஜயமகா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.சன்ஜீவ மகநாம, தப்போவ வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் நஸ்லினா நஜீம், மதுரங்குளி பொலிஸ் பொறுப்பதிகாரி கே.கே.ஜீ. விக்கிரமசிங்க, மதுரங்குளி மேர்ஸி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் பௌசுல் ரஹ்மான், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.முனாஸ் ஆகியோருடன்


விஷேட அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார், நீர்கொழும்பு அல்ஹிழால் தேசிய கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர்,மதுரங்குளி வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.டீ.அமான், இலங்கை கூட்டுறவுச் சங்க வைத்தியசாலை சம்மேளனத்தின் அபிவிருத்தி, திட்டமிடல் பணிப்பாளரும், கூட்டுறவு கிராமிய வங்கி பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.றியாஸ், கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம், கனமூலை பெரிய பள்ளியின் முன்னாள் தலைவர் என்.எம்.ஏ. பஸீர், மின்ஹாஸ் ஏற்றுமதி உரிமையாளர் கே.ஐ.இஸ்மாயில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


"தாருஸ்ஸலாம் வைத்திய நிலையம்" கனமூலை பெரிய பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





























No comments