Breaking News

கரைத்தீவில் "எதிர்கால இளைஞர்கள்" என்ற தலைப்பில் தலைமைத்துவ பயிற்சி

"எதிர்கால இளைஞர்கள்" என்ற தலைப்பில் வளர்ந்து வரும் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ECO & Social Harmony Warriors (Club) ஏற்பாட்டில் 2022.01.08 ஆம் திகதி கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)யில் இடம் பெற்றது.

 

இந்நிகழ்வின் அதிதிகளாக வண்ணதிவில்லு பிரதேச கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை, கரைத்தீவு பெரிய பள்ளிவாசல் இமாம், வண்ணாத்திவில்லு பிரதேச செயலளகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் அதிகாரிகளான திருமதி ஹினாயா, திருமதி ஷியானி, ஆசிரியை பஹ்மிதா, தோழர் ஹிஷாம் ஹுஸைன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

 

இந்நிகழ்வின் வளவாளர்களாகக் கலந்துகொண்ட சட்டத்தரணி எஸ்.ஐ.எம். ஹிஸ்மி தலைமைத்துவ ஒழுங்குகள் தொடர்பாகவும், நசீஹா அன்சார் (விரிவுரையாளர் - இலங்கை திறந்த பல்கலைக் கழகம்) ஆளுமை வளர்ச்சி பற்றியும், இப்லால் அமீன் இளைஞர் வலுவூட்டல் என்ற தலைப்பிலும் குழுச் செயற்பாடுகளின் ஊடாக தலைமைத்துவப் பயிற்சியினை வழங்கினர்.

 

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் மற்றும் Search For Common Ground நிறுவனங்களின் மூலமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தன.

ஊடக பிரிவு: Eco and Social Harmony Warriors (Club)









No comments