Breaking News

பிரபல சமூக செயற்பாட்டாளர் யாஹ்யாகானின் மகள் ஹஷ்மியா, திறமைச் சித்தி பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு!

மாளிகைக்காடு நிருபர்

பிரபல சமூக செயற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதிப் பொருளாளருமான ஏ சி யஹ்யாகானின் சிரேஷ்ட புதல்வி ஹஷ்மியா யாஹ்யாகான், இல்மா சர்வதேச பாடசாலையில் இணைந்து, பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்திற்கு அமைவாக கல்வி கற்று, அங்கு உயர்தர பரீட்சைக்கு தோற்றி Chemistry, Biology, Physics  மற்றும் Mathematics உள்ளிட்ட சகல பாடங்களிலும் A+ சித்தியை பெற்றுள்ளார்.


குறித்த பாடங்களில் சிறந்த சித்தியை பெற்றமைக்காக வெலாரிஸ் நாட்டில் உள்ள உலகின்  தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில்  இணைந்து மருத்துவத் துறையில் கற்பதக்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார். சிறந்த சித்தியைப் பெற்று அவர், பெற்றோருக்கும்,கற்ற பாடசாலைக்கும் பிறந்த ஊருக்கும் குறிப்பாக நாட்டுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார். ஏ.சி. யஹியாகான், சியானா யஹியாகான் ஆகியோரின்  சிரேஷ்ட புத்திரியான ஹஷ்மியா, ஹனான் மற்றும்  ஹுஸ்னி அஹமட் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.


கல்வி மற்றும் ஏனைய தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும்  ஏ.சி. யஹியாகான் அவர்களது மகள் இவ்வாறு சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது  அவரது சமூக செயற்பாட்டுக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே  கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments