Breaking News

புத்தளம் - அக்கறைப்பற்று மண்ணில் கன்னி கலாநிதி உதயம்

✍️ ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்

கொழும்பு பல்கலைக்கழக கல்வியல் பிரிவு விரிவுரையாளர் என்.எம்.எம். சபீக் (SLPS), B.Ed.(Hons); M.Ed. (OUSL)  தனது கலாநிதி படிப்பை மேற்கொள்வதற்கு உள்வாரியாக மலேசியா நாட்டின் சுல்தான் இத்ரீஸ் கல்விப் பல்கலைக்கழகம் (University Pendikan Sultan Idris) 18/10/2001 தெரிவு செய்யப்பட்டார். "அல்ஹம்துலில்லாஹ்" இக்கற்கை நெறியை அந்நாட்டிலிருந்து மேற்கொள்வதற்காக  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30/01/2022 விரிவுரையாளர் என்.எம்.எம்.சபீக் மலேசியா செல்கிறார்.


என்.எம்.எம். சபீக் மதுரங்குளி நல்லாந்தழுவையைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முஹம்மது மற்றும் ரைஹானத்து உம்மா ஆகியோரின் புதல்வராவார். இவர் ஆரம்பக் கல்வி முதல்  க.பொ.த. உயர் தரம் வரை கடையாமோட்டை தேசிய பாடசாலையில் கல்வியைக் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானதுடன் 2001 - 2005 வரை  கல்விமாணி (BED)  சிறப்புப் பட்டத்தை தனது முதல் பட்டமாக பெற்றுக் கொண்டார்.


அதனைத் தொடர்ந்து தனது முதுநிலைமாணியை இலங்கை திறந்த பல்கலைக்கழ௧த்தில் 2010 ஆம் ஆண்டு (MED) பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது கலாநிதி பட்டத்தை பெறுவதற்காக இவர் மலேசியா பயணமாகின்றார்.


இவர் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2010 - 2015 -12 - 31 ஆம் திகதி  வரை அப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்று அப்பாடசாலையில் துரித கல்வி அபிவிருத்தியை மேற்கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து தான் கற்ற பாடசாலையான கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பிரதி அதிபராக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக தெரிவு செய்யும் வரை அப்பாடசாலையில் கல்வித் துறையிலும், ஏனைய பௌதிக அபிவிருத்தியிலும் அளப்பறிய பங்காற்றினார்.


இவர் புத்தளம் அக்கறைப்பற்று, கடையாமோட்டை தேசிய பாடசாலையின்  முதலாவது   கலாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.


இவரை கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடாசாலையின் விஞ்ஞான அபிவிருத்திக் குழு,  பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.




No comments