Breaking News

வியத்கம வேண்டாம் வியத்மகவால் விரிசல்களே அதிகம் - பிரதமர் ஜனாதிபதிக்கு நீண்ட உபதேசம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்த அரும் பணியாற்றிய வியத்மக அமைப்பின் செயற்பாடுகள் அரசாங்கத்திலும் நாட்டிலும் பெரும் விரிசல்களையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்விருவருக்கும் இடையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் பிரதமர் ஜனாதிபதிக்கு இவ்விடயங்கள் தொடர்பில் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.


தற்போது உயர் பதவிகளை வகிக்கும் வியத்மக உறுப்பினர்களின்செயற்பாடுகள் மற்றும் பாரம்பரிய அரசியல்வாதிகளை ஒதுக்கும் வகையில் இடம்பெறும் இவர்களின் செயல்பாடுகள் அரசாங்கத்தினுள் பாரிய விரிசல்களையும் அரசியல் அரங்கில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .


1977 களில் இருந்த அரசாங்கம் தூக்கி எறியப்படுவதற்கு கியூ வரிசைகளே காரணமாக அமைந்ததாகும் இன்றைய அரசாங்கமும் இதே பாதிப்புக்கு உட்பட்டு வருவதாகவும் இங்கு ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




No comments