கல்முனையில் பாதுகாப்பு படையினருக்கான அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்
(நூருள் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ், எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பாதுகாப்பு படையினருக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு கூட்டம் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலக கணக்காளர்கள்,
யூ.எல்.எம்.ஜவாஹிர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜெளபர், அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களான
றாசிக் நபாயிஸ், எம்.என். பஸ்மிலா,
பொலிஸார், கடற்படை அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கு முதல் அனர்த்த முன் ஆயத்த திட்டங்கள் தொடர்பாகவும், வெள்ள நீர் தேங்கும் இடங்களை அகற்றுவது, அனர்த்த தயார்படுத்தலை செய்வது, பாதுகாப்பு படையினர் மட்டத்தில் அனர்த்த குழுக்களை வலுப்படுத்தல் , முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை விருத்தி செய்தல், வெள்ளம், சூறாவளி அனர்த்தங்கள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளல் தொடர்பாகவும் மற்றும் நலன்புரி இடங்களின் விஸ்தரிப்பு , அவசர உதவி பொருட்கள், 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயற்பாடுகள், வெள்ள அனர்த்த திட்டங்கள், அனர்த்த நிலையின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களை தேடிப் பாதுகாத்தல் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் அனர்த்த நிலை தொடர்பிலான
துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
No comments