Breaking News

சாய்ந்தமருதில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ..!

(எம் .என் .எம் . அப்ராஸ்)

அனர்த்த  நிலையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நிலை பற்றிய கலந்துரையாடல்  மற்றும் இது தொடர்பில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு  தெளிவுட்டும்விழிப்புணர்வுநடவடிக்கைகள்  சாய்ந்தமருதில் நேற்று  (11)இடம்பெற்றது.


குறித்த நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். எம். ஆசிக் அவர்களின் ஒருங்கிணைப்பில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.  ஏ. சி. எம் . ரியாஸ்  அவர்களின்  தலைமையில்இடம்பெற்றது .


ஆரம்பமாக சாய்ந்தமருது  ரியாலுள் ஜான்னா வித்தியாலத்தில்  பிரதேச மட்ட முக்கியஸ்தகர் களுடன்

அனர்த்த முகாமைத்துவம் பற்றிய ஆலோசனைகள் மற்றும் இது  தொடர்பில் வழிகாட்டல்கள்  மேற்கொள்ளப்பட்டது


இதன் போது இங்கு உரையாற்றிய அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம். ஏ. சி. எம் . ரியாஸ்  அவர்கள் பொது மக்களுக்கு அனர்த்த நிலை தொடர்பில் அனர்த்த பாதுகாப்பு  மற்றும் தயார்படுத்தல்  முன்னாயத்த  நிலை பற்றி  விழிப்புணர்வினை மேற்க்கொள்ளும் முகமாக சாய்ந்தமருது பிரதேச  செயலகம்,அனர்த்த முகாமைத்துவ நிலையம்,கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள் , மாவட்ட மட்டஅனர்த்த முகாமைத்துவ பிரதேச  மட்ட தொண்டர்கள்  என அனைவரும் ஒன்றிணைந்து இவ் விழிப்புணர்வு வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள் ளோம் இதன் மூலம் பொது மக்களுக்கு அனர்த்த நிலையில்  மேற் கொள்ள கூடிய நடவடிக்கை பற்றிய   தெளிவு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. 


அத்துடன் விரைவில் சாய்ந்தமருது  தோனா வெள்ள நீர் வழிந்து செல்லும் முகாமாக சீர் செய்யும்  நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது .மேலும் சாய்ந்தமருது  தோணாஅண்டிய பகுதிகளில் வசிக்கின்ற  மக்களுக்கு சுற்று சூழல் பாதுகாப்பு  தொடர்பான விழி்புணர்வுகளை மேற்கொள்வதுடன்  சூழல் பாதுகாப்பது சார்ந்த போட்டிகளை  நடாத்தி பரிசில்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.


 குறித்த நிகழ்வின் பிரதான அங்கமாக அனர்த்த நிலையின்  போது மேற்கொள்ள விடயங்கள் பற்றி பொது மக்கள் மத்தியில் வழிகாட்டல்  விழிப்புணர்வை மேற்கொள்ளும் முகாமாக சாய்ந்தமருது 08  மற்றும் 10 ஆம் கிராம சேவகர் பிரிவில் அனர்த்தபாதுகாப்பு  மற்றும் தயார்படுத்தல் முறைமைகள் தொடர்பாக வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு  அனர்த்தநிலையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி தெளிவுட்டப்பட்டதுடன் அவை  தொடர்பிலான  துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது .


 சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்த கர்களான எம்.எம்.எம். அர்சாத் , எம். எச். முபாரக் ,கிராம சேவகர்கள்,

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்பிரிவில் (8,10) உள்ள கிரம மட்ட அனர்த்த 

முகாமைத்துவ உறுப்பினர்கள் ,அனர்த்த முகாமைத்துவ பிரதேச  மட்ட தொண்டர்கள் என பலரும்  இதில் கலந்து கொண்டனர்.


குறித்த விழி்ப்புணர்வு செயற்பாடு மூலம் தங்கள் அனர்த்த நிலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய பலவிடயங்கள் அறிந்து கொண்டதாகவும்  இவ்வாறான  நல்ல செயற்பாடு களை மேற்கொண்டுவரும்  அனைவருக்கும் பொது மக்கள்  தமது நன்றியினை  இதன் போது தெரிவித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.











No comments