13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த பல்கலை மருத்துவ மாணவி தணிகாசலம் தர்ஷிகா கௌரவிப்பு
பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவியான தணிகாசலம் தர்ஷிகா மருத்துவ இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்ததை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(26) நடைபெற்றது.
கடந்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் பெற்றமைக்காக அவரது வீட்டில் வைத்து குறித்த கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் , மற்றும் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் ,சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் ,இலங்கை தமிழரசு வாலிபர் முன்னனி துணைச் செயலாளர் நிதான்சனும் கலந்து கொண்டனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மாணவியை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர்.
No comments