மாலைதீவு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கிரிக்கட் போட்டி
இலங்கை மற்றும் மாலைதீவு பாராளுமன்ற அங்கத்தவர் அணிகளுக்கிடையிலான போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடாகி உள்ளது.
மாலைதீவு ஜனாதிபதியின் வேண்டு கோளுக்கிணங்க இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இத்தீர்மானத்திற்கிணங்க விரைவில் இலங்கை பாராளுமன்ற அங்கத்தவர் கிரிக்கட் குழு மாலை தீவுக்குச் சென்று அங்கு விளையாடவும் அதன்பின் மாலைதீவு பாராளுமன்ற கிரிக்கட் அணி இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு போட்டி ஒன்றில் கலந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி இப்போட்டிகளில் விளையாட உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளார்.
No comments