Breaking News

குறிஞ்சாங்கேணியில் உயிர் நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி ஆற்றில் அண்மையில் இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபையின் 44 ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (29) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறிஞ்சாங்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்களினால் 02 நிமிடம் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.





No comments