கடையாமோட்டை தேசிய பாடசாலையில் குவைத் - கடையாமோட்டை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுற்றுமதில் அமைப்பதற்கான அங்குரார்பண நிகழ்வு!
பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் மதுரங்குளி, தொடுவா வீதியின் அருகில் அமைந்திருக்கும் மதில் மிகவும் ஆபத்தான நிலையில் விழும் தருவாயில் காணப்பட்டது. இதனை பாடசாலையின் அதிபர் எம்.எச். தௌபீக் அவர்கள் குவைத் - கடையாமோட்டை பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஏ.எம். சர்ஜுன் அவர்களிடம் இம்மதிலை அமைத்துத்தரும் படி வேண்டுகோள் விடுத்தார்.
அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் (3,50 000/=) பெறுமதி கொண்ட 120 அடி நீளம் உடைய மதில் அமைப்பதற்கான அங்குரார்பண நிகழ்வு இன்று 30/11/2021 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா அவர்களின் இணைப்புச் செயலாளருமான ஏ.எச்.எம். றியாஸ் அவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும், முந்தல் - மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான ஏ.எச்.எம்.ஹாரூன்,பாடாசாலை விஞ்ஞான அபிவிருத்தி குழு செயலாளர் சீ.எம். தாவூத் மற்றும் குவைத் கடையாமோட்டை பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஏ.எம்.சர்ஜுன் உட்பட அதன் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஏ. அஷ்ரப் உட்பட ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
K.M.C.C.(N.S) MEDIA UNIT
No comments