ஜாமிஆ நளீமிய்யா கலாபீட புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை - 2021
2021/2022 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் 2021/11/16, 17,18 ஆந் திகதிகளில் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறும்.
🗓 16 /11/2021 வட மத்திய, வட மேல், தென் மாகாணங்கள்
🗓 17/11/2021 வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
🗓 18/11/2021 மத்திய, சப்ரகமுவ, மேல்,ஊவா மாகாணங்கள்
பரீட்சாத்திகளின் கவனத்திற்கு:
1. பரீட்சாத்தியுடன் அவரது பெற்றார்/பாதுகாவலர்களில் ஒருவர் மாத்திரம் வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவார்.
2. முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடை வெளியைப் பேணுதல் உட்பட சுகாதார வழிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது கட்டாயமாகும்.
3. நேர்முகப் பரீட்சை நடைபெறும் அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு பின்னரே பரீட்சாத்திகள் வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர்.
4. நேர்முகப் பரீட்சை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.
5. எழுத்துப் பரீட்சை காலை 10.30ற்கு இடம்பெறும்.
6. பரீட்சாத்திகள் விண்ணப்பப்படிவங்களை வாயிற் காவல் பகுதியில் பெற்று பூர்த்தி செய்யுமாறு வேண்டப்படுகின்றனர்.
பரீட்சாத்திகள் எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்புச் சாட்சிப் பத்திரம்
2. க.பொ.த(சா.த)பரீட்சைப் பெறுபேற்று அட்டை
3. ஆள் அடையாள அட்டை
4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
5. புலமைச் சான்றிதழ்கள்
மேலதிக விபரங்களுக்கு 0776504765/0773573815
பிரதிப் பணிப்பாளர் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் பேருவளை
09/11/2021
No comments