Breaking News

பறகஹதெனிய தேசிய பாடசாலை அபிவிருத்திக் குழுக் கூட்டம்

பாடசாலை அபிவிருத்தி மற்றும் கல்வி முன்னேற்றச் செயற்பாடுகளை கட்டியெழுப்பி சிறந்த கல்வியாளர்களை உருவாக்கும் நோக்குடன் குருநாகல், பறகஹதெனிய தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்பட்டது. 


இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி அதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ளுதல் அத்துடன் பாடசாலையின் பெளதீகவளத்தினை மேம்படுத்துவதற்க்கான ஒத்துழைப்பை வழங்க அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றுவது சம்பந்தமாகவும் காலந்துரையாடப்பட்டது. 


குறிப்பாக சாதாரண தர, உயர் தர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை சிறந்த முறையில் பெற்றுக் கொள்ள கல்வி சார் வழிகாட்டல்கள் தரமானதாக வழங்கப்படுடல் வேண்டும். என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் உயர்தர பிரிவில் விஞ்ஞானம், வணிகம் மற்றும் கலைப்பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்ககூடிய கல்வி சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் அதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டது. மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் பழைய மாணவர்கள் சிலர் தொண்டர்களாக நியமிக்கப்பட்டதோடு இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு  தமது கருத்துக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


எம்.ஆர். சியாஉர் ரஹ்மான் 

பறகஹதெனிய








No comments