Breaking News

கல்முனை வலயத்தில் கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் ஆரம்பம்!

(மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர் )

அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளில் இன்று காலை கல்வி  நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தரம் 1தொடக்கம் 5 வரையான வகுப்பு மாணவர்கள்  உற்சாகமாக பாடசாலைகளுக்கு வருகைதந்துள்ளனர் .பாடசாலைகளை  பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டு பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.


இன்று  கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் சில பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இருந்த போதிலும் அதிகமான பாடசாலைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைக்கு உட்சாகத்துடன் வருகைதந்திருந்தனர்.


பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கை கழுதுவல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நோய் அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அதிபர்கள்  ஆசிரியர்கள்  பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.




No comments