கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக ஏ.ஏ. அஷ்ரப் நியமனம்
✍️ ஏ.எச். பௌசுல் ஆசிரியர்
பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பிரதி அதிபரான டீ.எம். பாரி அவர்களின் ஓய்வு நிலையை அடுத்து வெற்றிடமான இடத்திற்கு பிரதி அதிபரை தெரிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அப்பதவிக்கு பல்வேறு தரப்பினரையும் முன்மொழியப்பட்ட போதும் பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் பணி ஜுன் மாதத்திலிருந்து நடைபெற்று வந்தது.
பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கல்வி அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், ஆசிரியர் குழாம், முகாமைத்துவக் குழு அணைவரின் சிபாரிசுக்கிணங்க அதிபர் எம்.எச்.தௌபீக் அவர்கள் பிரதி அதிபராக ஏ.ஏ.அஷ்ரப் அவர்களை நியமித்தார்.
அஷ்ரப் ஆசிரியர் கடையாமோட்டை பாடசாலையின் தரம் ஒன்று தொடக்கம் தரம் பதின்மூன்று வரை கல்வி கற்ற பழைய மாணவராவார். (1996 -1998) 1996ஆம் ஆண்டு தொடக்கம் 1998ஆம் ஆண்டு வரை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியில் கல்வி டிப்ளோமாவை பெற்றுக்கொண்ட இவர் 2000ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் இணைந்து கொண்டு முதன் முதலாக விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக சுமார் 15 வருடங்கள் கடமை புரிந்தார். பின்னர் 2015 ஆண்டு மே மாதம் தொடக்கம் இன்று வரை கடையாமோட்டை தேசிய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.
ஆசிரியர் தொழிலில் 21 வருட அனுபவத்தைக் கொண்ட இவர் ஆசிரியர் (SLTS-1) முதலாம் தர ஆசிரியராவார். அதுமாத்திரமல்லாமல் இந்தியாவின் காமராஜ பல்கலைக்கழகத்தின் இளமாணி பட்டத்தையும் பெற்றவராவார்.
க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு வரலாறும், சுகாதாரம் உடற்கல்வி போன்ற பாடங்களை கற்பித்து அதிசிறந்த பெறுபெறுகளை பெற்ற ஒரு திறமைமிக்க ஆசிரியராவார். அது மாத்திரமல்லாமல் கடந்த கலங்களில் விருதோடை பாடசாலையிலும் கடையாமோட்டை பாடசாலையிலும் பாடசாலை நிர்வாகத்தில் திறமையாக செயற்பட்டு பல பௌதீக வள அபிவிருத்திகளை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மர்ஹும் ஓய்வு பெற்ற கிராம சேவகர் அபூபக்கர் அவர்ளின் மூத்த புதல்வருமாவார்.
இவரின் இப்பதவியானது பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை . எனவே அல்லாஹ்தஆலா இவருக்கு கிடைத்த பதவியைக் கொண்டு இப்பாடசாலை சகல விதங்களிலும் வளர்ச்சி பெற பிராத்திக்கின்றோம்.
கடையாமோட்டை பாடசாலையின் பழையமாணவர் பிரதி அதிபர் பதவிகளில் இவர் மூன்றாவது பிரதி ஆதிபராவார். முதலாவது பிரதி அதிபர் தற்போதைய அதிபர் எம்.எச்.தௌபீக், இரண்டாவதாக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்.எம்.எம்.சபீக், மூன்றாவதாக ஏ.ஏ. அஷ்ரப் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்.பௌசுல் ஆசிரியர் கடையாமோட்டை தேசிய பாடசாலை
No comments