பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா, சமிந்த இருவருக்கும் ஒழுக்காற்று விசாரணை
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே சமிந்த விஜேசிரி ஆகியோருக்கு ஒழுக்காற்று விசாரணை நடத்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது
.
இவர்கள் இருவரும் தெரிவித்துள்ள விமர்சனத்துக்குரிய சில கருத்துக்கள் தொடர்பில் இவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் இருவர் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒன்றுக்கொன்று முரணான தகவல்களால் கட்சி உள் வட்டாரத்திலும் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இறுதியாக ஊடகங்களில் கட்சிக்கு சார்பான தகவல்களை தெரிவித்துள்ள போதிலும் பலதரப்பட்ட விடயங்களில் தீர்மானங்களை நிறைவேற்றல் அதிகாரப் பிரதேசங்களில் இழுபறி போன்ற கருத்து முரண்பாடுகள் நிலவுவதாகவும் ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இவர்கள் இருவரும் தமது அமைப்பாளர் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருப்பது இத்தகவல்களை உறுதிப்படுத்துவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments