ஏறாவூர் பிரதேசத்தில் இரு இளைஞர்களை தாக்கும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் செயல் ஜனநாயக உரிமையை அத்துமீறும் செயல் - கலாநிதி.வி.ஜனகன் கண்டனம்.
ஏறாவூர் பிரதேசத்தில் இரு இளைஞர்களை தாக்கும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் செயல் ஜனநாயக உரிமையை அத்துமீறும் செயல் வன்மையாக கண்டிக்கிறேன். - கலாநிதி.வி.ஜனகன்..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இளைஞர்கள் இருவர் மீது கடுமையாக தாக்கும் வீடியோ காணொளி சமூக ஊடங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இச்செயல் ஜனநாயகத்தை அத்துமீறும் ஒரு அடாவடி தனமான செயல் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இளைஞர்கள் தவறு புரிந்திருந்தால் அவருக்கு எதிராக நீதித்துறையின் ஊடாக ஜனநாயக ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் உண்டு அதை விட்டுவிட்டு அடாவடித்தனமாக நடு வீதியில் வைத்து இந்த இளைஞர்களை தாக்குவது என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை மீறும் செயல்.
இந்த போக்குவரத்து
பொலிஸ் உத்தியோகத்தர் தன் கடமை சார்ந்த செயலை தாண்டி தான்தோன்றித்தனமாக நடந்து இருப்பது கடும் வேதனை அளிக்கின்றது.
பொலீசாருக்கு பொறுப்பான அமைச்சரும், பொலிஸ்மா அதிபரும் இந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக உடன் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன்குறிப்பிட்டுள்ளார்.
No comments