சுசில் பாராளுமன்றத்தில் சீற்றம் கடும் வார்த்தைப் பிரயோகங்களால் தாக்குதல்
வெளியில் சட்டமியற்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பத்திரங்களில் மின்சார தூண்கள் போல் அதற்கு கையை உயர்த்த நாங்கள் மொண்டிசோரி பிள்ளைகள் அல்ல என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் கடும் வார்த்தைப் பயன்படுத்தி உரையாற்றியுள்ளார்.
பாராளுமன்றம் சட்டம் இயற்றும் இடம் அதற்காகவே மக்கள் எம்மை தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த அரசாங்கத்தில் சட்டம் இயற்றும் நடைமுறை முறையாக இடம் பெறுவதில்லை சட்டம் எங்கோ இயற்றப்படுகிறது நாங்கள் அதற்கு கை தூக்க வேண்டும் இனிமேல் இது நடைபெறாது விடயத்துக்கு துணை போக முடியாது.
1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது அதன்பின் நல்லாட்சி அரசாங்கத்திலும் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது இவைகள் முறையான விதத்தில் உரிய விதிகளுக்கு அமைய நேர்மையாக தயாரிக்கப்பட்டன.
அதேபோன்று எமது புதிய அரசியலமைப்பு திட்டத்துக்கு அவசியமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் விவாதித்து இயற்றப்பட வேண்டும் என காரசாரமான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
No comments