பதவியை விட்டு சென்றவரை மீண்டும் அழைத்தார் ஜனாதிபதி
பதவியில் இருந்து விலகிச் சென்ற இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் அசேல குணசிங்கவை தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு மட்டும் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக் கூட்டுத்தாபனத்தின் உள் விவகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து இவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.இதற்கு ஜனாதிபதியும் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் இப்பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்கும் வரை எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு மாத்திரம் தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி இவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments