Breaking News

வாழ்வை மாற்றுவோம் அமைப்பினரால் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் நிவாரணம் வழங்கி வைப்பு !

மாளிகைக்காடு நிருபர்

வாழ்வை மாற்றுவோம் கலை கலாசார சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின் அனுசரணையில் வாழ்வை மாற்றுவோம் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.எல். அன்ஸாரின் தலைமையில்  சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று சாய்ந்தமருதில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.


சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கதிஜா கிண்ட கார்டன் பாலர் பாடசாலை பிரதானி ஸப்னா அமீனின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இந்நிகழ்வின் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாஜீத், கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், கிராம சேவை அதிகாரி ஏ.எம்.அஜ்ஹர், வாழ்வை மாற்றுவோம் அமைப்பின் உறுப்பினர் முஹம்மத் லிம்ஷாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







No comments

note