ராஜா கொள்ளுரே கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து நீக்கம்
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் வடமேல் மாகாண ஆளுநருமான ராஜா கொள்ளுரே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பிரிவு கட்சியின் மத்திய குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டையடுத்து இவர் கட்சித் தலைமை இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை வெட்டுதல் உட்பட அநாவசிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை தொடர்பில் இவர் மீது கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments