பாகிஸ்தான் அணியின் ஆச்சரியமான திருப்பத்திற்கு காரணம் மேத்யூ ஹைடன் - முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!
பாகிஸ்தான் இன்று சர்வதேச நிலையில் முன்னணி நிலைக்கு திருப்ப காரணம் அவ்வணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் ஆவார் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தனது பிரிவில் உள்ள 2 பிரபலமான அணிகளை தோற்கடித்ததன் மூலம் உலகில் முதல் தரமான கிரிக்கட் அணியாக பரிணமித்துள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய அணியின் வீரர்கள் குறிப்பாகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது புரியவில்லை ஆனால் மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் பந்து பேசுகிறார்கள் T20 உலகப் போட்டியில் சிறப்பாக பந்து வீசும் அணிக்கே அதிகமான வெற்றி வாய்ப்பும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments