21 ஆம் திகதி பாடசாலை வராவிட்டால் நவம்பர் மாத சம்பளம் இடை நிறுத்தம் - வடமேல் மாகாண ஆளுநர் எச்சரிக்கை
21 ஆம் திகதி பாடசாலை வராவிட்டால் நவம்பர் மாத சம்பளம் இடை நிறுத்தம் எனவும்,
21 ஆம் திகதி கடமைக்கு வராதவர்களை 25 ஆம் திகதி பாடசாலைக்கு வர அனுமதிக்கவும் மாட்டோம் - வடமேல் மாகாண ஆளுநர் எச்சரிக்கை
எதிர்வரும் 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பாவிட்டால் அவர்களின் நவம்பர் மாத சம்பளம் இடை நிறுத்தப் படும் என வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் 21ஆம் திகதி கடமைக்கு வராத ஆசிரியர்களை 25 ஆம் திகதி பாடசாலைக்கு வர அனுமதிக்கவும் மாட்டோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் இத்தினத்தில் தாங்கள் கடமைக்கு வரப்போவதில்லை எனவும் இத்தினத்தில் தாங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
No comments