சம்மாந்துறை SLMC Str ஏற்பாட்டில்" தலைவர் தின" நினைவேந்தல் நிகழ்வு.!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு விஷேட துஆப் பிரார்த்தனையும், நினைவு உரையும் சம்மாந்துறை SLMC Str இளைஞர் அணி ஏற்பாட்டில் இன்று(16) வியாழக்கிழமை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச்செயலாளர் மன்சூர் ஏ காதர், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் நளீம் உயர்பீட உறுப்பினர் அஸீஸ் மற்றும் மூத்த போராளிகள், அமைப்பின் ஆலோசகர்கள் SLMC Str இளைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post Comment
No comments