இந்தியாவின் பிரதான பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் மஹேல
தாய்நாட்டுக்கு பயிற்சி வழங்க உறுதி
இந்திய கிரிக்கட் அணியின் பயிற்சியாளராகும் வேண்டுகோளை நிராகரித்துள்ளார் நட்சத்திர கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன.
இந்தி கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளார்.
தாய் நாட்டின் கிரிக்கட் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க வேண்டிய கட்டாய நிலையில் தான் இருப்பதாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தியாவின் IPL போட்டித் தொடர்களில் விளையாடும் இந்தியாவின் பல பிராந்திய அணிகளுக்கு மஹேல ஜயவர்த்தன பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments