அரூஸ் மெளலவி ஊரின் ஒரு அருள் - எஸ்.எம்.எம். ஹனிபா (கனமூலை பாடசாலையின் முன்னால் அதிபர்)
(S.M.M. ஹனிபா ஆசிரியர் - முன்னால் கனமூலை பாடசாலையின் அதிபர்)
ஐம்பத்தெட்டு வயது. முப்பத்தெட்டு வருட கல்விப் புலச் சேவை. இருபத்தெட்டு வருட அதிபர் வகி பாகம். ஐந்து வருடங்கள் கனமூலை முமவி(அல் மிஸ்பா)வில் பணி புரியும் பாக்கியம்.
அரூஸ் மெளலவியை அறிந்திருந்தாலும் அவரைப் புரிந்து கொண்டது இக்காலத்தில் தான். அவர் எம்மோடு சேர்ந்து பணி புரிந்த அந்த நாட்கள் இவ்வளவு சீக்கிரம் காவியமாகும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அரூஸ் மெளலவி இல்லாத அல்மிஸ்பாவையும், ஆயிஷா மஸ்ஜித் தையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது வகிபாகம் பங்கம் விளையாமல் இருந்தது.
புதிதாக வருவோருக்கு ஊரைப் பற்றி அறிய செய்து இரசணை ஊட்டி ஊரின் பற்றையும் பாடசாலையில் சேவை செய்யும் ஆர்வத்தையும் ஊட்டி விடுவார். பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்து முடிக்கும் வரை ஓய்வு எடுக்க மாட்டார். எந்த அதிபர் வந்தாலும் அவரைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கருமமாற்றுவார். உற்ற சகோதரனை போல் ஆசிரியர்களுக்கு உதவி செய்வார். மாணவர் விடயத்தில் பெற்றாரை விடவும் அதிக அளவிலான அக்கரை செலுத்துவார்.
முதல் மாணவன் பாடசாலைக்கு வரும் முன் அவர் கடமைக்குச் சமூகமளிப்பார். பாடசாலையை விட்டு சகலரும் சென்ற பின்பே அவர் கடமையை விட்டு செல்வார்.
கல்விச் சுற்றுலாச் சென்றால் இரவில் தூங்க மாட்டார். விடுமுறை காலங்களில் மிகவும் சுத்தமாக இருக்கும் ஒரே பாடசாலை அல் மிஸ்பா தான். காரணம் அரூஸ் மெளலவி தான். அவரது நியமனம் எதுவாக இருந்தாலும் பாடசாலையில் அவர் பல்வேறு வகையான வகிபங்கு வகித்தவர். கடமைக்கு சமூகத்தில் அரூஸ் மெளலவி ஒரு தூண்டா மணிவிளக்கு. அவரைப்பற்றி ஏராளம் உள்ளன.
அல்லாஹ்வின் நியதிப்படி நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நல்ல காரியங்கள் அனைத்தும் இவ் உலகில் வாழ்வதோடு மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வழி வகுக்கும் இன்ஷாஅல்லாஹ்.
அவரது நல்ல காரியங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகாரத்து அருள் புரிவானாக. அவரது பிரிவால் தவிக்கும் மனைவி மக்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் துயரங்களைபப் போக்கி ஆறுதலையும் மன அமைதியையும் பாதுகாப்பையும் வழங்குவானாக. ஆமீன்
எஸ்.எம்.எம். ஹனிபா


No comments