சூடு பிடிக்கிறதா? சிறைச்சாலை விவகாரம்
சிறைச்சாலையில் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் புனரமைப்பு கைதிகள் நலன்புரி மற்றும் இரத்தினக்கல் தங்க ஆபரண அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தனது ஒரு அமைச்சுப் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை இத்தாலியில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இவ்விடயமாக அரசின் உயர்மட்ட ங்களோடு உரையாடியுள்ளார்.அத்துடன் அமைச்சர் லொஹானுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்
அடுத்தடன் அமைச்சர் லொஹானுடன் தொலைபேசியை கடுமையாகப் பேசி உள்ள பிரதமர் அடுத்த அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக மாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள சிறைக்கைதிகளிடம்
இவ்விடயமாக தகவல் சேகரித்தனர்....
மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் சட்டப்பிரிவு இவ்விடயம் குறித்து நாளை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
No comments