அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த
ஜனாதிபதியினால் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
தனது இராஜினாமா பற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், இன்றைய தினம் (15) அவர் அறிவித்த நிலையில், ஜனாதிபதி அவர்களும், அவருடைய இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
No comments