Breaking News

லொஹான் ரத்வத்தை விலகினாலும் அமைச்சர்

சிறைச்சாலை கைதிகள் அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து விலகிய லொஹான் ரத்வத்தை தொடர்ந்தும் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருக்கிறார்..க்ஷ.

இதற்குக் காரணம் அவர் தற்போது பதவி விலகியுள்ளது அவர் பொறுப்பில் இருந்து வந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் நலன்புரி புனரமைப்பு அமைச்சில் இருந்து மட்டும் ஆகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எனவே இவர் பொறுப்பில் இருந்த இன்னொரு அமைச்சான இரத்தினக்கல் தொழில்துறை தங்க ஆபரண அபிவிருத்தி அமைச்சில் இருந்து அவர் விலகாமையால் அவர் தொடர்ந்தும் இப்பதவியில் இராஜாங்க அமைச்சர் பதவியில் பணியாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.






No comments