பிரபல மனஅமைதிக்கான பயிற்றுவிப்பாளர் உமா பஞ்ச் கலந்து கொள்ளும் நிகழ்நிலை (Webinar) செயலமர்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள உள அமைதியும் மன அழுத்த முகாமைத்துவமும் எனும் தலைப்பில் பிரபல வாழ்க்கை மற்றும் மனஅமைதிக்கான பயிற்றுவிப்பாளர் உமா பஞ்ச் அவுஸ்திரேலியாவிலிருந்து கலந்து கொள்ளும் சூம் ZOOM மூலமான ஆலோசனை வழங்கும் நிகழ்நிலை (Webinar) செயலமர்வு இன்று (28) சனிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணி வரை நடை பெறவுள்ளது.
கொவிட் கால மன அழுத்தத்தைக் குறைத்து உளநலத்தை மேம்படுத்துவதற்கான எளிமையான பிரயோக நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைப் பெற்றுக் கொள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியூடாக இணைந்து கொள்ளலாம்.
அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link ஊடாகச் சென்று தங்களுடைய பெயர்களை விரைவாகப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முகநூல் (Facebook) முகவரியான https://www.facebook.com/SriLankaMuslimMediaForum/ மூலமாகவும் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள Link ஊடாக தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சமீஹா சபீர் தெரிவித்தார்.
இணைந்து கொள்ள : https://form.jotform.com/ 212354166621854?fbclid= IwAR3PRI0gQ2hIzdFTot0DuFq5fytB 1zfz6RLOrUq-EF8THG7bO5o_ we7S4Ik


No comments