JobVibe.lk - Sri Lanka Job Portal

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியவர்கள் நல்லிணக்கத்தை ஏப்பமிடுகின்றனர் : சட்டமும் நீதியும் ஓர் இனத்துக்கா? -பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்!.

முஸ்லிம்கள் நாங்கள் உயிரிலும் மேலாக மதிக்கக்கூடிய நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்திய பதிவை பகிர்ந்த காரைத்தீவு பிரதேச சபை தவிசாளர் ஜயசிறிக்கு எதிராக பல முறைப்பாடுகள் ICCPR சட்டத்தின் கீழ் முறையிடப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிக்க கவலையளிக்கிறது. அதே நேரம் சட்டம் இனத்துக்கு இனம் வேறுப்படுகின்றதா? என சிந்திக்கத்தூண்டுகின்றது.


இன்று மற்றுமொரு கருத்தை நடராஜா பேசி அரசியல் முகவரி தேட முற்படுகின்றார். இவர் ஹபாயா அணியும் முஸ்லிம் பெண்களில் 90% ஆனோர் விபச்சாரத்தில் ஈடுப்படுவதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகும் இழிவான கருத்தை தெரிவித்துள்ளார்.


இந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் - தமிழ் உறவை கேள்விக்குறியாக்க முனைவதையும் முகவரியே இல்லாத அவர் முகவரி தேட இனவாதத்தை கக்குவதையும் உடன் நிறுத்த வேண்டும். 


சட்டம் இவ்வாறானவர்கள் மீது தொடர்ந்தும் மௌனித்திருக்குமானால் இவர்களுக்கு பின்னால் எந்த சக்தி இருக்குமென்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ள முடியும்.


நல்லிணக்கம் இன்று இவர்களால் விழுங்கப்பட்டு ஏப்பமிடப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும் இவ்வாறான இனவாத கருத்துக்களை கக்குபவர்கள் வெளிப்படாமலிருக்க இவர்கள் மீது சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். இது தொடர்பில் அரசோடு நேரடி தொடர்பிலும் மறைமுக தொடர்பிலும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.


அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகள் அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சியை சார்ந்தவர்கள் மௌனம் கலைந்து இவ்வாறானவர்களுக்கெதிராக முன்வந்து நடவடிக்கையெடுக்கவேண்டுமெனவும் வேண்டிக்கொள்கிறேன்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال