Breaking News

புத்தளம் நகரபிதாவின் விஷேட அறிவிப்பு..!

இன்று(9) காலை முதல் புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரைப் பூங்கா தொடர்ந்து 2 வாரங்களுக்கு மக்கள் பாவனைக்குத் தடை செய்யப்படுவதாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம் ரபீக் தெரிவித்தார்.


இருப்பினும் காலை மாலை வேளைகளில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.


அதிகரித்துச் செல்லும் கொரோனா அலை காரணமாக,

அடுத்து வரும் வாரங்களில் நெருக்கடியான நிலை ஏற்படலாம் என்றும் தற்போதைய டெல்ற்றா வைரசின் பரவல் காரணமாக இன்னும் சில வாரங்களில் இலங்கை மிக மோசமான மருத்துவ அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் சுகாதாரப் பிரிவுகள்  விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தும் தாம் இம் முடிவை எடுத்ததாத் தெரிவித்ததோடு மக்கள் ஒன்று கூடல்களைத் தவிர்த்து அத்தியாவசிய தேவைகளுக்காக ஒருவர்  மட்டும் வெளியே வருவதோடு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து நடக்குமாறும் நகரபிதா வேண்டிக் கொண்டார்.


எம்.எஸ்.எம். ரபீக்

நகர பிதா புத்தளம்.





No comments