Breaking News

கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்க காரியாலயம் திறந்து வைப்பு.

மதுரங்குளி கனமூலையில் இயங்கிவரும் தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் பிரதான காரியாலயம் கனமூலை பெரிய பள்ளியின் வளாகத்தில் (03)  உத்தியோகபார்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கனமூலை  பெரிய பள்ளி நிருவாக சபையின் தலைவர் என்.எம்.ஏ.பஸீர் அவர்களும், கௌரவ அதிதியாக நிருவாக சபையின் செயலாளரும் அதிபருமான என்.எம்.எம். நஜீப் அவர்களும், சிறப்பு அதிதிகளாக தாருஸ்ஸலாம் நலன்புரிச் சங்க ஆலோசனை சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.



இந்நிகழ்வானது தாருஸ்ஸலாம் நலன்புரிச் சங்க தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












No comments