“ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.
“ஹரித” தொலைக்காட்சி அலைவரிசையின் முதலாவது சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமானது.
விவசாய துறையினால் போஷிக்கப்பட்ட இந்நாட்டின் கடந்தகால சுபீட்சத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்குடன் சமய பின்புலத்துடன் சிறந்ததோர் விவசாய பொருளாதாரத்திற்கு வழிகாட்டுவது இந்த அலைவரிசையின் பிரதான நோக்கமாகும்.
விவசாய கைத்தொழிலின் மூலம் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், புதிய விவசாய தொழிநுட்ப முறைமைகள், பண்டைய காலத்தில் இருந்துவந்த உயர் விவசாய தொழிநுட்ப முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பாகவும் மக்களை அறிவூட்டுவது “ஹரித” தொலைக்காட்சியின் அடிப்படை எண்ணக்கருவாகும்.
இந்த “ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரத்ன கல்வி பரிபாலன சபையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்களினால் “ஹரித” இணையத்தளமும் (www.harithatv.com) கருப்பொருள் பாடலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
மரக் கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு மரக்கன்று ஒன்றை வழங்கி வைத்தார்.
டயலொக் அலைவரிசை என் 16 மற்றும் பியோ டிவி அலைவரிசையின் 09 ஊடாக ஹரித தொலைக்காட்சி அலைவரிசையை மக்கள் பார்வையிட முடியும்.
மகாநாயக்க, அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய சமயத் தலைவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மேல் மாகாண ஆளுநர் மாசல் எப் த எயாபோஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் அமைச்சர்கள் தூதுவர்கள், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
No comments