Breaking News

அம்பாறை மாவட்ட 32 அணிகள் போட்டியிடும் கிரிக்கட் சமர் வெள்ளியன்று ஆரம்பமாகிறது

மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர்  

விளையாட்டினுடாக சகோதரத்துவம் வளர்ப்போம் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த 32 முன்னணி கழகங்கள் கலந்து கொள்ள உள்ள " றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி நாளை வெள்ளிக்கிழமை (02) மாலை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கழக முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் பிளாஸ்டர் விளையாட்டு கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைக்க உள்ளார். மேலும் பிரதேச செயலாளர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், றபீக் கிண்ண  தொடரின் பிரதான அனுசரணையாளரான றபீக் கட்டுமான நிறுவனப் பணிப்பாளர் ஏ.எம். றபீக், அம்பாறை மாவட்ட கழகங்களின் பிரதான நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், வீரர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளதாக பிளாஸ்டர் விளையாட்டுக்கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார் தெரிவித்தார்.




No comments

note