Breaking News

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் மர்ஹும் இஸ்மாயில் ஆசிரியர் - அனுதாப செய்தியில் ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்விக்கு சேவை செய்த கல்வியலாளார் இஸ்மாயில் ஆசிரியர் காலமானார் எனும் செய்தி மிகவும் கவலையான ஒன்றாகவே எல்லோரது மனதிலும் வந்து சேர்ந்தது. இன்று எங்களை விட்டு பிரிந்த கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வி புரட்சியை ஏற்படுத்திய இஸ்மாயில் ஆசிரியர் அவர்களின் இழப்பு ஊருக்கு மட்டுமல்ல, கல்வி சேவைக்கும் மிகப்பெரும் பாரிய இழப்பாகும். பல மாணவர்களை நேரிய வழியில் முன்னோக்கி அழைத்து சென்ற அந்த கல்வியலாளர் இன்று காலமாகியுள்ளார்.(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி வரலாற்றில் இஸ்மாயில் ஆசிரியர் ஆற்றிய பங்களிப்பு மிக கனதியானது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மாணவர்களை தனது சொந்த முயற்சியினால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கற்பித்து அதில் அதிகூடுதலான மாணவர்களை சாதாரண தரத்தில் சித்தி பெற செய்ய அவர் செய்த அர்ப்பணிப்புக்கள் இன்றும் கல்வி சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எம்.எச்.ஹனஸ் மொஹிதீன் (நளீமி) அவர்களின் வழிகாட்டலுடன் உயர்தர வகுப்புக்களை உருவாக்க பாடுபட்டு அதில் வெற்றியும் கண்ட அன்னாரின் செயல்கள் மூலம் முதல் ஆண்டிலையே மாணவர்களை அதிசிறந்த பெறுபேறுகளை அடையச்செய்ததுடன் பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களை வழியனுப்பிய அவரின் அர்ப்பணிப்புகள் சமூகத்தின் கல்விக்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தது.

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இவர் மூலம் ஏற்படுத்தப்பட்ட கல்வி வளர்ச்சி அக்கறைப் பத்து பிரதேசத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியது என்பதில் ஐயமில்லை எனலாம்.

அன்னார் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியிலிருந்து அதிபர்களையும், ஆசிரியர்களையும்,அரச உத்தியோகத்தர்களையும் உருவாக்கியிருக்கிறார். அந்தவகையில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எச்.தௌபீக் மற்றும் புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.றிபாய்தீன் ஆசிரியர்களான ஏ.எச்.பௌசுல், ஏ.ஏ.அஷ்ரப், எஸ்.எச்.எம்.சாலிஹீன், ஏ.எச்.எம். ரசூல் மரிக்கார், ஏ.அனஸ், ஏ.அஸ்லம் , எம்.ஐ.எப். றிஸ்வானா இவ்வாறு நீண்டு கொண்டே செல்கிறது பட்டியலிட முடியாது. அது தவிர அரச உத்தியோகத்தர்களான மர்ஹும் ஏ.ஆர்.எம்.அமீன், ஜே.எம்.நஸார், சலீம், எம்.றிஸ்வான், ஏ.எம்.நளீம்கான் ஆகியோர் இவ்வாசிரியரின் கடமைகளை சரியாக செய்தமையால் நாளை மறுமையில் சாட்சியாளர்களாக நிற்பாளர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனவே அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸை நஸீபாக்குவானாக என பிராத்திக்கிறேன்.



ஏ.எச்.பௌசுல்
ஆசிரியர்
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி.






No comments

note