Breaking News

றியலாஸ் ஆசிரியர் எழுதிய "யசோதரையின் வீடு" நூல் வெளியானது.

(நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம். சினாஸ்)

ஆசிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய "யசோதரையின் வீடு" எனும் கவிதைத்தொகுப்பு இன்று சனிக்கிழமை (20) காலை மருதமுனை கலாச்சார மத்திய நிலையத்தில் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


மறைந்த இலக்கியவாதி "கதைசொல்லி எம்.ஐ.எப். ரஊப் அரங்கில்" கவிஞர் விஜிலியின் நெறியாள்கையில் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஷின் தலைமையில் நடைபெற்ற இந்த கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் நூல் அறிமுகத்தை எழுத்தாளர் ஜிப்ரி ஹாஸன் நிகழ்த்தியதுடன் எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் எழுத்தாளர் அப்துல் றஸாக் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையை வழங்கினர். 


இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த புகழ் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலக்கியவாதிகள், பிராந்திய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.









No comments

note