Breaking News

வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

நூருள் ஹுதா உமர்



சாய்ந்தமருது இபாட் மகளிர் அமைப்பினால் வசதி குறைத்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அமைப்பின் தலைவி ஜே. எல். ஜசீமாவின் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட  கரையோர பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக் கலந்து கொண்டு புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேலும் ரெட் சில்லி உணவாக நிறுவுனர், 
சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் வக்கில், சாய்ந்தமருது 16ம் பிரிவின் கிராம சேவகர் எம்.எல். அஜ்ஹர், அமைப்பின் செயலாளர் எஸ்.ஏ. ரோஷான், பொருளாளர் எம்.எச். பஸ்மியா உட்பட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments

note