Breaking News

கல்முனை பொதுப் பணி மன்றத்தினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தனர்.

(சர்ஜுன் லாபீர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமை கல்முனை பொதுப் பணி மன்றத்தினர் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர் கபீரின் இல்லத்தில் சந்தித்தனர்.

இச் சினோகபூர்வமான சந்திப்பில் நடப்பு அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் விடயங்கள் போன்ற பல விடயங்கள் பற்றி பேசப்பட்டது.

இச் சினோகபூர்வ சந்திப்பில் அமைப்பின் தலைவர் தொழிலதிபர் அல்ஹாஜ் எஸ்.எல் அமீர்(நயீர்),தவிசாளர் ஏ.எல்,எம் சறூக்(ரசாக்),பிரதி தலைவர் எம்.தன்சூல்,பொருளாளர் யூ.எல் நெளபர், உறுப்பினர்களான பீ.டீ கபிர்,எம்.பீ.எம் சலீன்,எம்.நஸீர்,எம்.நிசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








No comments

note